வியாழன், 4 பிப்ரவரி, 2010

ஒரு நந்தவனத்தின் இடப்பெயர்வு


காற்றெனவே நெஞ்சம் தழுவி
கவலையெல்லாம் களைந்து
தேற்றும்அந்த நந்தவனம்
ஊற்றான அன்பாய்முகிழ்ந்து
-உறவாகி
புன்னகையில் உயிர் கொல்லும்
அன்பு பூப்பூக்கும் நந்தவனம்
நேற்றுத்தான் வந்தாலும்
நீண்ட உறவாகி உயிரோடு ஒன்றிவிட்ட
ஓர்வலுவாய்
மாற்றமேயின்றி மறுபிறவி வரைக்கும்
நிழழளிக்கும் என நான் நினைத்திருந்த ந்ந்தவனம்
ஆற்றல் பெறுவதற்காய் இன்னும் அழகுபெறுவதற்காய்
தோற்றம் மிளிர்ந்து உலகின் துயர் துடைக்கும்
பெருநோக்கால் இடம் பெயரும்
சோலை நிழலிருந்து
அன்பு குளிர் நனைநத
ஏழை நிலம் ஏங்கும்
மனம் பாலையாய் வெடிக்கும்
நந்தவனம் இனி
நன்றாய் பூப்பூக்கும்
மின்னலாய் அழகொழிரும்
மென்மேலும் அழகுபெறும்
என்பதறிந்து மனம் ஆறும்
நினைவு நிழலில் இளைப்பாறும்.

வேலணையுர்- தாஸ்


drsothithas@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக