புதன், 30 டிசம்பர், 2009

கவிதை


இதயத்தின் சாளரம்
இறக்கை கட்டி வரும்
எண்ணங்களின் ஊர்வலம்
காதலை கவலையை
கண்கவரும் இயற்கையை
சொல்லடுக்கி சோடித்து
சொப்பனம் போல் செய்துவிடும்
மெல்ல வருடும் இதயத்தை
சில கவிதை சீறியெழும்
ஆனாலும் கவிதை அழகு
அது சொல்லும் தமிழ் அழகு


வேலணையுர் தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக